Sunday, January 31, 2010

ஒற்றை வார்த்தையில் ஒரு தெய்வம்



என் வாழ்வின் அர்த்தம் நீ தான்
என் வாழ்வின் ஒளியும் நீ தான்

என் இதய துடிப்பும் நீ தான்
என் கண்கள் மூடும் போது என் கடைசி எண்ணமும் நீ தான்

என் முதல் முத்தமும் நீ தான்
என் ஒற்றை நிலவும் நீ தான்

என் கண்கள் கலங்கும் போது என் ண்கள் துடைப்பதும் நீதான்
என் கால்கள் தவறும் போது என் கலங்கரை விளக்கமும் நீதான்

என் கட்டில் மெத்தையும் நீ தான்
என் வாழ்வின் சொத்தும் நீ தான்

எனக்கு வாழ்கை தந்ததும் நீ தான்
எனக்கு வாழ்க்கையை புரிய வெய்த்ததும் நீ தான்

உன் ஒற்றை சிரிப்பிற்காக நான் நிலவையும் வென்று வாழ்வேன்
உன் ஒற்றை கண்ணிற்காக நான் கண்ணகியாகவும் ஆவேன்

உன் ஒற்றை தலை வலியும் நானே
உன் கனவுகளின் தேடலும் நானே

எனக்காகவே வாழும்,என் ஒற்றை தெய்வமும் நீயே
இம் மண்ணில் நான் கண்ட தெய்வமும் நீயே

என் கல்லறையில் இருந்தும் உனக்கு தலை வணங்குவேன் தாயே

என் தாயே!!!

No comments: